யாழ்.பொலிகண்டியை சேர்ந்த தவராசா செல்வநாயகி அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Reha
2 years ago
யாழ்.பொலிகண்டியை சேர்ந்த தவராசா செல்வநாயகி அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா செல்வநாயகி அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லக்கண்டு(ஆசிரியர்), வள்ளிநாயகி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாதுரை, இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவராசா(தவம்- புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிஷாந், நிவேதினி(நிவேதா), நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துவேதா, மகிந்தன்(மகி), நிஷாந்தன்(நிசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றியான், மோகனா செல்வி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

இராசநாயகி, கணேசலிங்கம்(ஜப்பான்), விக்னேஸ்வரி(ஆசிரியை- கொழும்பு), வினாயகலிங்கம்(சுவிஸ்), சிவலோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீ(கனடா), கலா(கனடா), சாந்தி(பிரான்ஸ்), ஆனந்தன்(சுவிஸ்), சிவஞானம், மிக்கா, தவராசா, கலாரஞ்சினி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துரைரத்தினம்- அதிஸ்டதேவி, அரசரட்ணம்- கலைச்செல்வி, யோகேஸ்வரன் - செல்வராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2022 வியாழக்கிழமை அன்று Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவம் +41798728397 
நிஷாந் +41763931827 
ஆனந்தன் +41799604637 
லிங்கம் +41764271579