எட்டு வருட மார்க்கக் கல்விக்கு உரிய அங்கீகாரம் அவசியம் – மௌலவி அப்துல் முனாப் வலியுறுத்தல்!

#SriLanka #Covid Vaccine #LANKA4 #education
Abi
1 hour ago
எட்டு வருட மார்க்கக் கல்விக்கு உரிய அங்கீகாரம் அவசியம் – மௌலவி அப்துல் முனாப் வலியுறுத்தல்!

எட்டு வருடங்கள் மார்க்கக் கல்வியைக் கற்று மௌலவி சான்றிதழைப் பெறும் உலமாக்களுக்கு உரிய கல்வி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் மௌலவியுமான ஐ.எல். அப்துல் முனாப் (SLTS) வலியுறுத்தியுள்ளார்.

சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற அல்-அர்சத் அஹதிய்யா பாடசாலை மாணவர்களின் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில் உரையாற்றும்போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இஸ்லாம் பாட ஆசிரியர் நியமனங்களில் நிலவும் வயதெல்லை மற்றும் கல்வித் தகுதிகள் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், உலமாக்களின் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ற தொழில்வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 2027ஆம் ஆண்டு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒலிபரப்பு உள்ளிட்ட ஊடக உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தார்.

அத்துடன், அல்-அர்சத் அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவையும் தனது சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!