போதிய எரிவாயு கையிருப்பு இல்லாத காரணத்தினால் லிட்ரோ - லாஃப் நிறுவனங்களின் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்!
#government
#Litro Gas
#SriLanka
Reha
2 years ago
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் போதிய எரிவாயு கையிருப்பு இல்லாத காரணத்தினால் தமது எரிவாயு விநியோகங்களை இடைநிறுத்தியுள்ளன.
தற்போது இலங்கை எதிர்நோக்கும் கடுமையான டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு கடன் வரைவுகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடைசியாக 30,000 மெற்றிக் டன் எரிவாயு கொண்ட கப்பல் 6 நாட்களுக்கு முன்பு நாட்டை வந்தடைந்தது. எனினும், 2 நாட்களுக்குள் விநியோகங்கள் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.