அமெரிக்காவில் மனித உரிமை செயற்பாட்டாளரான இலங்கை தமிழ்ப் பெண் மீது துப்பாக்கி சூடு!
மனித உரிமை செயற்பாட்டாளரும், ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் பெற்ற அமைப்பின் உறுப்பினரும், ஒருங்கிணைந்த சர்வதேச பெண்கள் அமைப்பின் நிறுவுனருமான இலங்கை தமிழ்ப் பெண் ராஜி பற்ரிசன் பயணித்த வாகனம் மீது அமெரிக்காவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினரான டானி டேவிஸால் ஒழுங்குபடுத்தபட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த ராஜி அங்கு வழங்கப்பட விருது ஒன்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
நிகழ்வுக்கு குடும்ப சகிதம் சிகாகோவின் நெடுஞ்சாலை வழியே மகிழூந்தில் சென்று கொண்டிருந்த வேளை பக்கவாட்டாக வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வாகன கண்ணாடி வழியே சுட்டுவிட்டு வேகமாக தப்பிச்சென்றுள்ளனர்.
வழமைக்கு மாறாக பக்கவாட்டில் திரும்பி இருந்ததால் ராஜி மயிரிழையில் உயிர்தப்பி உள்ளார். இச்சம்பவம் சம்பவம் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்படத்தை அடுத்து அவர்கள் விரைந்து வந்து ராஜியை மீட்டு அவசர சிகிச்சை வாகனம் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரியவருகிறது. சிக்காக்கோ பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவர் தான் எழுதிய ரவெழடன வழடன வசரவா ழக வயஅடை பழழெஉனைந என்ற நூலின் பிரதிகளை அந்நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துச் சென்றிருந்தார்.
உலகப்பரப்பில் ஈழத்தமிழர்களுக்காக செயற்பட்டு வரும் மனித உரிமை செற்பாட்டாளர்களில் ஒருவரானா ராஜி பற்ரிசன்; இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.