கடலில் நங்கூரமிட்டுள்ள இரண்டு எரிவாயு கப்பல்கள்: ஒரு நாளைக்கு 36,000 டொலர்கள்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு இருப்புக்களை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
இரண்டு கப்பல்களுக்கும் பணம் செலுத்துவதற்கு தேவையான டொலர் தொகையை இலங்கை மத்திய வங்கி அவற்றுக்கு இன்னும் கைமாற்றாததால் அதனை எதிர்பார்த்தவாறு அந்தக் கப்பல்கள் கடலில் காத்திருக்கின்றன.
3,500 மெட்ரிக் தொன் எடை கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்களும் நாட்டுக்கு வந்து சுமார் 10 நாட்கள் ஆகிவிட்டது.
தொடர்புடைய எரிவாயு இருப்புக்கள் கடலில் நங்கூரமிடப்பட்ட காலப்பகுதியில், தாமதக் கட்டணமாக அவர்கள் நாளொன்றுக்கு US $ 18,000 செலுத்த வேண்டும்.
இரண்டு கப்பல்களும் நாளொன்றுக்கு 36,000 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த எரிவாயு கையிருப்பை இறக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.