தேங்காய் எண்ணையின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம்!

#Food
Mayoorikka
2 years ago
தேங்காய் எண்ணையின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம்!

தேங்காய் எண்ணையின் விலை அதிகரிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எரிபொருள் விலையேற்றம் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேங்காய் தட்டுப்பாடு காரணமாக இது ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப விலை ஏறுகிறதா? அல்லது தொழிலுக்கு நிம்மதி தருகிறதா? என்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தேங்காய் எண்ணெய் தொழிலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக தேங்காய் எண்ணெய் கொண்டு செல்வதற்கான செலவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்தால் தேங்காய் எண்ணையின் விலையை அதிகரிக்கப்போவதில்லை எனவும், இல்லாவிட்டால் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புத்திக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!