யாழில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

#drugs #Arrest #Women
Prasu
2 years ago
யாழில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் பனிப்புலம் – கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டிருக்கின்றனர்.

இதன்போது வீட்டில்  1கிராம் 70,மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. குறித்த கெரோயினை போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதான பெண் ஒருவரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கையின்போது சங்கானையை சேர்ந்த 27 வயது இளைஞனும், கொலன்னாவ வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!