ஜெனிவா அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை விதிகளுக்கு முரணானவை: ஜீ.எல்.பீரிஸ்
#UN
Mayoorikka
2 years ago
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் பெரும்பாலான விடயங்கள் சர்வதேச சமூகத்திற்கு பொருத்தமானவை அல்ல என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியும் கலந்து கொண்டார்.