போர்த் தீவிர நிலையிலும் இலங்கைக்கு ரஷ்யா கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி!
இலங்கையில் எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ரஷ்யா அதனை வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு மிகக் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.கச்சா எண்ணெய்க்காக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, இவை ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள் அல்ல என்பதனால், ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு எண்ணெயை பெற்றுக்கொள்ள முடியும்.
ரஷ்யாவின் நட்பு நாடாக இலங்கை மற்றும் இந்தியா உள்ளன. கச்சா எண்ணெய்யை அதிகரித்து வரும் நிலையில் சந்தை விலையை விட குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் இலங்கைக்கு கச்சா எண்ணெய் கப்பலை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெயை வழங்குவதன் மூலம் இலங்கையில் எண்ணெய் விலையை அரசாங்கம் குறைக்க முடியும்