மின் பாவனையாளர்கள் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்
இவ்வாறான மின்சாரம் துண்டிக்கப்படும் காலங்களில் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.
அதன் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன, மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரையான நெரிசல் மிகுந்த நேரங்களில் மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மின்சாதனங்கள் வாங்கும் போது மக்கள் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, இன்று பிற்பகலிலும் பல பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏ முதல் எல் வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது. அந்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் மின்தடை ஏற்படும். மேலும், இன்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை P to W மண்டலங்களில் 3 மணி நேரம் மின்தடை ஏற்படும்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று தெரிவித்துள்ளது.
அந்த பகுதிகளில் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்தடை ஏற்படும்.