முள்ளியவளை சிறுவர் இல்ல சிறுமிகள் இருவர் தற்கொலை முயற்சி; 5 சிறுமிகள் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்!
முல்லைத்தீவு முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் அலரி விதையை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவிகள் இருவரும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 13, 14 வயதான இரண்டு சிறுமிகள் நேற்று பாடசாலை சென்ற நிலையில் பாடசாலையில் வைத்தே சிறுமிகள் அலரி விதையை உட்கொண்டனர்.
குறித்த சிறுமிகள் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் அவர்கள் கல்வி கற்கிறார்கள். சிறுமிகளின் இந்த விபரீத முடிவு தொடர்பில் பொலிசார் நடத்திய ஈவிசாரணையில்,
சிறுவர் இல்லத்தில் வசிக்கக்கூடிய நிலைமையில்லையென சிறுமிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இல்ல நிர்வாகத்தினர் தம்மை சரமாரியாக திட்டுவதாகவும், இதை பொறுக்க முடியாமலேயே அவர்கள் அலரி விதை உட்கொண்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரமும் குறித்த சிறுவர் இல்லத்திலிருந்து 5 சிறுமிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கபப்டும் நிலையில், முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.