ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்...
Prabha Praneetha
2 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். புதன்கிழமை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு.
நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் அரச தலைவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொலர் பற்றாக்குறை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆற்றவுள்ள உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை அவரது உரையை கேட்பதற்காக நாட்டில் சுழற்சி முறையில் அமுலாக்கவிருக்கும் சுழற்சி முறையிலான மின்வெட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.