வெஜ் குருமாவுடன் சாப்பிட மெதுமையான பரோட்டா செய்வது எப்படி?
#Cooking
#Vegetable
#meal
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை:
- மைதா மாவு – 2 கப்,
- தயிர், பால் – தலா கால் கப்,
- சமையல் சோடா – கால் டீஸ்பூன்,
- சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
- நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- மைதா மாவுடன் நெய், சர்க்கரை, உப்பு, சமையல் சோடா சேர்த்துப் பிசிறி, தயிர், பால் மற்றும் தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். அதன் மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி 3 மணி நேரம் ஊற விடவும்.
- ஊறிய மாவில் ஒரு உருண்டை எடுத்து மெல்லியதாக, வட்டமாக திரட்டி அதன் மீது பரவலாக எண்ணெய் தடவி மடித்து சுருட்டவும் (புடவை கொசுவம் போல).
- பிறகு, சப்பாத்தி குழவியால் சற்று கனமாகத் தேய்த்து தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
- இதே போல 4, 5 பரோட்டா க்களை சுட்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இரண்டு கைகளாலும் இரண்டு ஓரங்களிலும் சேர்த்துத் தட்டி எடுத்து வைக்கவும்.
- வெஜ் குருமா இதற்கு சரியான ஜோடி.