இதுவரையில் 97 குழந்தைகள் யுத்தத்தில் உயிரிழப்பு - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
ரஷ்ய படைகள் உக்ரேனில் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா இன்று 20 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன இதற்கிடையில், உக்ரேன் தலைநகர் கீவ்வில் செவ்வாய்க்கிழமை முதல் முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கி வரும் சூழ்நிலையில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது
இந்தநிலையில், உக்ரேனில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.