போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது: நெருக்கடிக்கு நாம் காரணம் அல்ல: மஹிந்த

Mayoorikka
2 years ago
போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது: நெருக்கடிக்கு நாம் காரணம் அல்ல: மஹிந்த

போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க எதிரணியினர் படாதபாடுபடுகின்றனர். அவர்கள், தமது ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட வைத்துள்ளனர். இதனால் என்ன பயனை அவர்கள் அடைந்தார்கள் எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிரணியினர், ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், 69 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதை எதிரணியினர் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர்.

அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம். இதை எமக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக்களும் புரிந்துகொள்வார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி இதில் உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!