பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரி காலி, மாத்தறையில் மக்கள் அணிதிரண்டு கையெழுத்து சஜித்தும் களமிறங்கி அதிரடி
#SriLanka
#government
#Law
Prasu
2 years ago
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை காலி மற்றும் மாத்தறையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதில் மூவின மக்களும் அணிதிரண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டனர்.
இரு மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் எதிர்க்கட்சிக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், முற்போக்குக் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டனர்.