ரஷ்யா எடுத்துள்ள அதிரடி முடிவு - அனைத்திற்கும் தடை
ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 24 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்திகொண்டன.
ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தின. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தடை செய்தது.
பின் கடந்த மார்ச் 14-ம் தேதி இன்ஸ்டாகிராம் செயலியையும் ரஷ்யா முடக்கியது. இந்த நடவடிக்கையால் ரஷ்யாவில் இருந்த 8 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விபிஎன் உள்ளிட்ட சேவைகள் மூலம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த தொடங்கினர்.
இதையடுத்து ரஷியா, இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக ரோஸ்கிராம் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ரோஸ்கிராம் செயலியின் வடிவமைப்பு பணி நடைபெற்று வருவதாகவும், மார்ச் 28-ம் தேதி முதல் இந்த செயலி பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் இந்த ரோஸ்கிராம் செயலியில் இருக்கும். ரோஸ்கிராம் மூலம் பயனர்கள் வருவாயும் ஈட்ட முடியும் என ரஷியா தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து வகை தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க ரஷியா முடிவெடுத்துள்ளது.