ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை புனித இடமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வில் பிரதமருக்கு ஏதிராக எதிர்ப்பு

#Protest #Mahinda Rajapaksa #Jaffna
Prasu
2 years ago
 ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை புனித இடமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வில் பிரதமருக்கு ஏதிராக எதிர்ப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாகதீப புராண ரஜமஹா விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை புனித இடமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் பல சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் நாவக்குளிய சமித்தி சுமண ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மடாலயமும் பிரதமரின் தலைமையில் சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

தமது பிள்ளைகள் காணாமல் போய் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் கொழும்பு அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பிரதமர், ஜனாதிபதி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகையின் மீது கற்கள் மற்றும் மணலை வீசி தீவைத்து எரித்தனர்.