இன்றைய வேத வசனம் 21.03.2022: நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு
நான் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட பின்னும் என்னை ஏன் தேவன் இந்த பூமியில் உயிரோடு வைத்திருக்கிறார் ?
நான் இந்த பூமியில் அடைய வேண்டியது மற்றும் செய்யவேண்டியது என்ன?
கிறிஸ்து எனக்குள் உருவாக வேண்டும், நான் கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்தில் பங்கு பெற வேண்டும். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும்.
இதை எனக்குக் கற்றுக் கொடுக்கும் உபதேசமே ஆரோக்கியமான உபதேசம். இதுவே என்னை வெறும் கிறிஸ்தவனாக அல்ல மணவாட்டியாக மாற்றும்.
"ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு." (#I_தீமோத்தேயு 3-5).
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. (தீமோத்தேயு 4:3-5)
நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1)
ஆமென்!!