நறுமணம் கமழும் ஆட்டிறைச்சி பிரியாணி சமைத்துப்பாருங்கள்...
#Cooking
#Mutton
#Biryani
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்
- ஆட்டிறைச்சி 1 கிலோ
- வெங்காயம் 1/4 கிலோ
- தக்காளி 200 கிராம்
- இஞ்சி விழுது 50 கிராம்
- பூண்டு விழுது 50 கிராம்
- பச்சை மிளகாய் 4
- மிளகாய்த் தூள் 4 தேக்கரண்டி
- தயிர் 200 மிலி
- பட்டை 1 துண்டு
- கிராம்பு 4
- ஏலக்காய் 2
- கொத்தமல்லித் தழை நறுக்கியது 6 மேஜைக்கரண்டி
- புதினா 4 தேக்கரண்டி.
- எலுமிச்சை 1 பழத்தின் ஜூஸ்
- ரிஃபைண்டு கடலை எண்ணெய் 1/4 லிட்டர்
- அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாசுமதி) 1 கிலோ
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணைய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன்,
- நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
- இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
- மிளகாத்தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.
- தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி ,புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து,
- நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
- அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- அதில் அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேக விட வேண்டும். எலுமிச்சை சாறு விடுவதால் அரிசி உடையாது.
- இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான தீயில்,
- எண்ணைய் மேலே வரும்வரை சூடாக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் சன்னமாக கிளற வேண்டும்.
- அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில்
- ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.
- தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம். 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
- அப்புறம் என்ன, வெட்ட வேண்டியது தான்!