விளையாட்டுத்துறை அமைச்சரான நான் நீர் விளையாட்டு விளையாடுவது தவறா? - நாமல்
Prathees
2 years ago
மாலைதீவுக்கு சென்று நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதில் என்ன தவறு என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வினவினார்.
சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீர் விளையாட்டில் ஈடுபட்டமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாலைதீவு ஒரு தீவு. அங்கு நீர் விளையாட்டுக்கள் அதிகம் உள்ளன.
விளையாட்டு நிகழ்வுகளை அவதானிக்கவே சென்றதாகவும் இதன்போதே நீர் விளையாட்டில் ஈடுபட்டதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது பழைய காணொளி என்றும் தம்மை தொடர்பு படுத்தி இது குறித்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.