9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய ஹாங்காங் அரசு

#Covid 19
Prasu
2 years ago
9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய ஹாங்காங் அரசு

ஆங்காங் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து விமானங்கள் ஹாங்காங்குக்கு வர கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 9 நாடுகளுடனான விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்பட 9 நாட்டு விமான போக்குவரத்துக்கு ஹாங்காங்  தடை விதித்து இருந்தது.

இதற்கிடையே 9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் விலக்கி கொள்ளப்படுவதாக ஹாங்காங்  தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஹாங்காங் விட மோசமாக இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானோருக்கு கடுமையான அறிகுறிகள் இல்லை என்றார்.

மேலும் வருகிற 1-ந்தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தி கொள்ளும் காலம் 7 நாட்களாக குறைக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!