30,000 கிமீ மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்யும் சத்குரு ஜக்கி வாசுதேவ்

Prasu
2 years ago
30,000 கிமீ மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்யும் சத்குரு  ஜக்கி வாசுதேவ்

உலக  முழுவதும்  மண் வளத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும் எனவும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமென 100  நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு இன்று லண்டனில் இருந்து தொடங்கினார்.

இந்தப் பயணத்தை ரஃப்பல்கர் சதுக்கத்தில் ஒரு  7 வயது சிறுமி தொடங்கிவைத்தார். இதற்கு முன்னதாக       ஈஷா யோக மையத்தின் நிறுவனர்  சத்குரு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

இதையடுத்து, தனி ஆளாக இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும்  சுமார் 30,000 கிமீ பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 கண்டங்களில் 27 நாடுகளுக்குப் பயணித்து இந்தியாவுக்கு திரும்பவுள்ளார்.

இந்தப் பயணத்தில் அவர் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை அவர் சந்திக்கவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!