சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும்: மத்திய வங்கியின் ஆளுநர்

Prathees
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும்: மத்திய வங்கியின் ஆளுநர்

அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று (22) ‘திவயின’ விடம் தெரிவித்தார்.

அதனை நிதி அமைச்சும், மத்திய வங்கியும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், தற்போது இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பொருளாதார சபையிலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், இது தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விடுத்த விசேட அறிக்கையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.