மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தொழிலை கைவிட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தயார்...!
Prabha Praneetha
2 years ago
கால்நடை உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில்துறைக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நீடித்தால் எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பிரச்சனைகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தொழிலை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.