நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியே சர்வகட்சி மாநாடு! ஜனாதிபதி

Mayoorikka
2 years ago
நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியே சர்வகட்சி மாநாடு! ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வக்கட்சி மாநாடு ஜனாதிபதி காரியாலயத்தில், இன்று (23) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி என்பன இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளன.

அத்துடன், எதிரணியின் தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலான கட்சிகளும், சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளன.

அதேநேரம், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளது.

இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில், 11 கட்சிகளின் கூட்டணியின், 3 உறுப்பினர்கள் பங்கேற்பதாக, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த சர்வகட்சி மாநாடானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் முன்னெடுக்கப்படுகிறது. 

இதேவேளை குறித்த மாநாட்டில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுகையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி.

அத்துடன் இந்த சர்வகட்சி மாநாடானது, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!