22 தமிழ்நாட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

Prabha Praneetha
2 years ago
 22 தமிழ்நாட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கைது செய்து யாழ்ப்பாணம் - மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அதனையடுத்து மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட போது குறித்த மீனவர்களை மார்ச் மாதம் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்மாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் மீன்டும் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது 22 மீனவர்களையும் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்மாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று சிறைகாவல் முடிந்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!