பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரியுள்ளது

#SriLanka #Australia
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரியுள்ளது

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது.

கடன் திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவில் இருந்து பருப்பு, பால் மா உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடன் திட்டத்தின் கீழ் இலங்கை இதற்கு முன்னர் இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளது. இது அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக. சீனாவிடம் இருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகவும் கோரப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரியவந்தது.