எம்பி மார் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி விபச்சார மோசடி எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது?
பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சொந்தமானது எனக் கூறி, பிலியந்தலை கரடியான பிரதேசத்தில் யுவதிகளால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இரண்டு யுவதிகள் உட்பட நால்வர் கடந்த 21ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உயர் பொலிஸ் அதிகாரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் மகன்களுடன் எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்களை பெரிதாக்கி அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு,
கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் சில காலமாக விபச்சார வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் ஏ.எஸ்.பி உதய குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
புலனாய்வு பிவிரின் அதிகாரிகளை பல நாட்கள் பணியில் ஈடுபடுத்தி அந்த இடத்தில் விபச்சார விடுதி இருப்பதை உறுதி செய்த பின்னர் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது இரண்டு அழகான பெண்கள் மட்டுமே இருந்ததாகவும், சம்பவ இடத்தில் ஐந்து பெண்கள் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாகவும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.