வட் வரி 15 முதல் 18 சதவீதமாக உயர்வு: வரித் திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றில்!

Prathees
2 years ago
வட் வரி 15 முதல் 18 சதவீதமாக உயர்வு: வரித் திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றில்!

மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தில் திருத்தங்கள் பொது நிதிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 
01) நிதிச் சேவைகளை வழங்குவதற்கான மதிப்பு கூட்டு வரியை 15% லிருந்து 18% ஆக உயர்த்துதல். 

02) தொற்றுநோய்கள் மற்றும் பொது அவசர காலங்களில் வழங்கப்படும் மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் மருந்து நன்கொடைகள் மீதான VAT இல் இருந்து விலக்கு.

03) 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் பொது நிதிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (22) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரித் திருத்தச் சட்டமூலம் நாளை  24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!