ஒரு கிலோ மர முந்திரி(கஜூ)யின் விலை 7,000 ரூபாய் ஆக அதிகரிப்பு
துப்பரவு செய்யப்படாத மர முந்திரி (கஜூ) இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து, ஒரு கிலோ மர முந்திரி விலை ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது.
புத்தாண்டு காலங்களிலும் மர முந்திரிக்கான கேள்வி அதிகரிக்கும். உள்நாட்டு மர முந்திரிக்கு (கஜூ) சிறந்த சந்தை வாப்பை ஏற்படுத்தும் நோக்கில், முந்திரி (கஜூ) இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
அண்மையில் ஒரு கிலோ கிராம் மர முந்திரி (கஜூ) 250 ரூபா முதல் 350 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ முந்திரியின் (கஜூ) விலை 800 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் மர முந்திரி (கஜூ) கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாரங்கா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் மர முந்திரிக்கான (கஜூ) கேள்வி அதிகரித்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். மர முந்திரி கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ கிராம் முந்திரிப் பருப்பு ரூ.3500 முதல் 5000 வரையிலான விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மார்ச் மாத இறுதியில் இருந்து முந்திரி (கஜூ) அறுவடை செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு சுமார் 12,000 மெட்ரிக் டொன் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முந்திரி (கஜூ) அறுவடை நிறைவடைந்த பின்னர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முந்திரி வைன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அது தொடரபான பல ஆய்வு நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.