07 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பிய ஆப்கான் மாணவிகள்
#Taliban
#Student
#Women
Prasu
2 years ago
ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள்கைப்பற்றினார்கள்.
இதையடுத்து பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. 2 மாதங்களுக்கு பின்னர் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் இன்று பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன.
12 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் இன்று பள்ளிக்கு திரும்பினார்கள்.