விசேஷமாக சாப்பிட கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி?

#Cooking #Prawn #curry
விசேஷமாக சாப்பிட கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

  • இறால் – 250 கிராம்,
  • பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்,
  • நறுக்கிய பச்சை மிளகாய் – 2,
  • வெங்காயம் – 1,
  • தக்காளி – 1,
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
  • தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
  • சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
  • மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
  • உடைத்த மிளகு – 1 டேபிள் ஸ்பூன்,
  • தேங்காய் பால் – 1 கப்,
  • கோகம் புளி – 2 சின்ன துண்டுகள்,
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
  • கறிவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை :

  1.  தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  2. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மசாலாத் தூள்கள் அனைத்தை யும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின்பு தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறால், கோகம் புளி போட்டு வேக விடவும்.
  4. தேங்காய் பால் நன்கு வற்றியதும், உடைத்த மிளகு, சிறிது எண்ணெய் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.