IPL Match 06 - 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match 06 - 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் 25 ரன்னும், உமேஷ் யாதவ் 18 ரன்னும் எடுத்தனர்.

பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்தில் பெங்களூரு அணியும் தடுமாறியது. கேப்டன் டூ பிளசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத் டக் அவுட்டானார். விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார். டேவிட் வில்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு, ஷாபாஸ் அகமது பொறுப்புடன் விளையாடினர். ரூதர்போர்டு 28 ரன்னிலும், ஷாபாஸ் அகமது 27 ரன்னிலும் அவுட்டானார்.

இறுதியில், பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து, முதல் வெற்றியைப் பதிவு செய்தது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4