இன்றைய வேதவசனம் 31.03.2022: பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
ஒரு கிராமத்தில் ஒரு இளம் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். மிக எளிய குடும்பம் என்றாலும் வருகின்ற வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஒரு சமயம் அந்த பெண்னின் கணவர் வேலையில் இருந்து வீட்டிற்கு வரும்போது தன் நண்பனையும் வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்து விட்டார்.
மனைவிக்கோ ஒரே பதட்டம்! ஏனென்றால், அவர்கள் சாப்பிடுவதற்கு 12 இட்டிலிகளே ஆயத்தம் செய்திருந்தாள். இப்பொழுது கூடுதலாக ஒரு நபர் வந்துவிட்டதால் அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
எனினும் உனவை பறிமாற ஆரம்பித்தாள். கணவர் தட்டில் 4 இட்டிலியும், அவரது நண்பர் தட்டில் 4 இட்டிலியும் வைத்துவிட்டு மிகவும் பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தனர். இவள் தன் கணவனிடம் இன்னும் இரண்டு இட்டிலிகள் வைக்கட்டுமா? என்று கேட்டதற்கு நான்கு இட்டிலிகளுக்கு மேலாகவா ஒரு மனுஷன் சாப்பிடுவான்? என்று எனக்கு வேண்டாம் என கூறி விட்டான்.
அவனது நண்பரிடம் அதே கேள்வியை கேட்டதற்கு போதும் எப்போதுமே மூன்று இட்லி தான் சாப்பிடுவேன் இன்றைக்கு கூடுதலாக 1 இட்லி சாப்பிட்டு விட்டேன் என்று கூறிக் கொண்டே இருவரும் கைகளை கழுவ வெளியே சென்றனர்.
அப்போது கணவன் மனைவியிடம் மெதுவாக மீதமுள்ள 4 இட்லியை நீ சாப்பிட்டு விடு என்று கூறியதும் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.
தேவ ஜனமே இன்று உங்களுடைய குடும்பத்தில் இப்படிப்படட புரிந்துகொள்ளுதல் கணவன் மனைவி இடையே உண்டா..? என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்!
தேவன் அருளிச் செயகின்ற இந்த உன்னதமான உறவை கனபடுத்துங்கள்!!
ஆதியாகமம் 2:18
பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.