IPL Match14 - கொல்கத்தாவுக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match14 - கொல்கத்தாவுக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷண் 15 ரன்னிலும், பிரிவிஸ் 29 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் மும்பை அணி 55 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்துள்ளது. திலக் வர்மா 38 ரன்னுடனும், பொல்லார்டு 5 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல்உள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4