இன்றைய வேத வசனம் 07.04.2022: திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். யாக்கோபு 1:22
சங்கடத்தைத் தவிர்த்து, வாகனம் நிறுத்துமிடத்தில் அந்த காட்சி நகைச்சுவையாக இருந்திருக்கும். இரு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் ஒன்றையொன்று வழிமறித்துக் கொண்டிருப்பதை குறித்து சத்தமாக வாதிட்டனர், கடுமையான வார்த்தைகளும் வெளிப்பட்டன.
இங்கே வேடிக்கையென்னவென்றால், இந்த சண்டை ஒரு சபையின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்தது. அந்த இருவரும் இப்போதுதான் அன்பு, பொறுமை, மன்னித்தல் குறித்த பிரசங்கத்தைக் கேட்டிருக்கக்கூடும். ஆனால் கோபத்தில் அனைத்தும் மறக்கப்பட்டன.
இதைப் பார்த்தமாத்திரத்தில் நான் சற்று சலிப்படைந்தேன். ஆனால் நானும் உத்தமன் இல்லை என்பதை உடனே உணர்ந்துகொண்டேன். பலமுறை நான் வேதத்தை வாசித்தப் பின்பும், சில நிமிடங்களிலேயே பாவமான சிந்தனைகளில் வீழ்ந்தேன்? “கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” (யாக்கோபு 1:23–24) அப்படிப்பட்ட நபரைப்போல் நான் எத்தனை முறை நடந்துகொண்டேன்?
யாக்கோபு தன் வாசகர்களை, திருவசனத்தை கேட்டு தியானிக்க மட்டுமல்லாமல் அதின்படி செய்ய அழைக்கிறார் (வச. 22). வசனத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்துவதே முழுமையான விசுவாசம் எனக் குறிப்பிடுகிறார்.
வேதவசனம் வெளிப்படுத்துவதை செயல்படுத்த வாழ்வின் சூழல் தடைபண்ணலாம். ஆனால், நாம் நம் தகப்பனிடம் கேட்டுக்கொள்கையில், அவருடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியவும், அவருக்கு பிரியமாய் நாம் நடக்கவும், நமக்கு நிச்சயம் உதவுவார்.