அயோட்டினுள்ள மற்றும் சருமத்திற்கு உகந்ததுமான இறால் குழம்பு சுவையாக சமைப்பது எப்படி?
#Cooking
#Prawn
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் :
- இறால் - 1/2 கிலோ
- சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தக்காளி - 1
- பூண்டு - 10 பல்
- பட்டை - 2 (1/2 இஞ்ச் அளவு)
- கிராம்பு - 5
- கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்த மல்லித் தழை - சிறிதளவு
- மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து, நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
- சாம்பார் வெங்காய த்தில் பாதியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீதியை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
- தக்களியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டு போட்டு சிவக்க வதக்கவும்.
- பிறகு இஞ்சி பூண்டு விழுது, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கியதும், இறாலைப் போட்டு நன்றாகப் பிரட்டவும்.
- இதனுடன் மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக வேக விடவும்.
- இறால் வெந்து கிரேவி நன்றாக சுண்டி எண்ணெய் மேலே வரும் போது, மிளகு தூள்,
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை சேர்த்து, அடுப்பி லிருந்து இறக்கவும்.
குறிப்பு
1. இறாலை கழுவும் போது கால் அல்லது அரை எலுமிச்சம் பழ சாற்றை அதனுடன் சேர்த்து கழுவினால் இறால் வாசனை குறைவாக இருக்கும்