இன்றைய வேத வசனம் 10.04.2022: துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக...

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 10.04.2022: துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக...

நம்மை வெறுக்கிறவர்களை எப்போதும் எதிரிகளின் வரிசையிலேயே பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நம்முடைய ஆதரவாளர்களின் வரிசையிலும் இருக்க முடியும்.

எந்த நண்பனுக்கு பின்னால் பிசாசானவன் நிற்கிறான் என்று யாருக்குத் தெரியும்?

நம்மை வெறுக்கிறவர்களின் சக்திகள் தான் நம்மை கவிழ்க்க வருகின்றன என்று நாம் எண்ணக் கூடாது. நம்முடைய நண்பர்களின் நலமான தோற்றங் கொண்ட ஆலோசனைகள் கூட நம்மை கவிழ்க்க காரணமாகலாம்.

நம்மை நாசமாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டும் நம்மை எதிர்க்கிறவர்களால் மட்டுமல்ல, நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிற நம்முடைய நண்பர்கள் சிலர் அக்கறையுடன் கூறுகின்ற யோசனைகளால் கூட நமக்கு பெரிய பாதிப்புகள் ஏற்பட முடியும்.

சாலமோன் ராஜாவின் மகனாகிய ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்தில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது.

இஸ்ரவேல் ஜனங்கள் ரெகொபெயாமிடம் வந்து ஒரு வேண்டுகோளை அவனுக்கு முன்பாக வைத்தனர். அந்த வேண்டுகோள் சம்பந்தமாக அவன் தேவபக்தியுடைய முதியவர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் நலமான ஒரு ஆலோசனையைக் கொடுத்தனர்.

ஆயினும் ரெகொபெயாம் அதனை உடனே ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் குழுவிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் தவறான ஒரு ஆலோசனையைக் கொடுத்தனர். (#1_இராஜாக்கள் 12:6,7)

ரெகொபெயாம் முதியோர்களின் நல்ல ஆலோசனையைப் புறக்கணித்து, தன்னுடைய ஆத்ம சினேகிதர்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டான்.

இதனால் ஜனங்கள் கலகம் செய்தனர். அதன் விளைவாகத் தாவீதால் கட்டி எழுப்பப்பட்ட இஸ்ரவேல் தேசம் இரண்டாக உடைந்தது போனது.

இங்கே சாத்தான் ரெகொபெயாமின் மேல் அக்கறை கொண்ட நண்பர்களின் வழியாக.
ரெகொபெயாமுக்கு கை கொடுப்பது போன்ற மாயத்தோற்றமுடைய தவறான ஆலோசனை வழியாக செயல்பட்டான்.

சிலுவையின் பாடுகள் உமக்கு வேண்டாம். என்று பேதுரு இயேசுவுக்குக் கொடுத்த ஆலோசனை அன்பின் விளைவுதான். ஆயினும் அது தேவனுக்கேற்ற ஆலோசனை அல்ல.

அந்த ஆலோசனை யின் பின்னணியில் சாத்தானின் சாயலை இயேசு கண்டார். எனவேதான், "அப்பாலே போ சாத்தானே" என்று பேதுருவை இயேசு கடிந்து கொண்டார். (மத்தேயு 16:23)

நம்முடைய நலத்தை நாடும் நண்பர்கள் வழியாகக் கூட பிசாசானவன் மாம்சீக ஆலோசனைகளைக் கொடுத்து, தேவ பிரசனத்திற்கு நம்மை தூரமாக்க முடியும்.

எனவே யார் வழி காட்டினாலும் சரி, ஆலோசனை சொன்னாலும் சரி, அவைகள் தேவனுக்கேற்றவைகள்தானா என்று ஆராய்ந்து பார்த்தல் அவசியம்.

ஆமென்!!

ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. (யோபு 22:18)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!