காலி முகத்திடலில் இருந்து உருவான 'புதிய கிராமம்'

Prathees
2 years ago
காலி முகத்திடலில் இருந்து உருவான 'புதிய கிராமம்'

தற்போதைய அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை வறுமையில் ஆழ்த்தி மக்களை வறுமையின் விளிம்பிற்கு கொண்டு வருவதாக குற்றம் சுமத்தி நாடு பூராகவும் உள்ள அனைத்து இளைஞர் குழுக்களும் நேற்று முன்தினம்  (09) பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தன.

அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திரண்டிருந்த இளைஞர்கள், முதியோர்கள், இளைஞர்கள், காலி முகத்திடலைச் சூழவுள்ள பிரதேசத்தை போராட்டக் களமாக மாற்றியமைத்து அரசாங்கத்தை கவிழ்க்கக் கோரி பலத்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பல இளைஞர்கள் மைதானத்தில் சண்டையிட்டும், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கூடாரம் அடித்தும், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் தமது வெற்றிக்காக இரவு பகலாக போராட்டக்களத்தில் தங்கியிருந்ததை காணமுடிந்தது.

போராட்டக்காரர்கள் கூடாரம் அமைத்துள்ள  ஒரு பகுதிக்கு 'புழுவுயுபுழுபுயுஆயு' (புழுவுயுபுழுஏஐடுடுயுபுநு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சியின் காரணமாக நாட்டில் ஆதரவற்ற மக்கள் தலைகுப்புற வீழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இளைஞர், ஜனாதிபதி உடனடியாக பதவியை விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்

எவ்வாறாயினும், போராட்டக் களத்தில் தொடர்ந்தும் இருக்கும் போராட்டக்காரர்களுக்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்க பல்வேறு அமைப்புகளும் குழுக்களும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் சமூகமும் உதவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை ஒரே போர்க்களத்தில் நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.