SLFP தலைமையகத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை!
Mayoorikka
3 years ago

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு முன்பாக இன்று மக்கள் குழுவொன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.
கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தனது அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த சந்தர்ப்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, போராட்டக்காரர்களுடன் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போதே இந்த நிலை ஏற்பட்டது.



