மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!
Mayoorikka
3 years ago

அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் குறித்த பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் ஏற்படவில்லை என அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, பற்றாக்குறை நிலவுவதாக சமூக ஊடகங்களின் கூறப்படும் மருந்துகளின் கையிருப்பு தொடர்பான விபரங்களை அறிவித்துள்ளது.
அதில், மேல் மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள, பற்றாக்குறை எனக் கூறப்படும் மருந்து மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களின் கையிருப்பு விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போதியளவில் கையிருப்பில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



