பணமோசடி குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணால் சிறை அதிகாரிகளுக்கு அழுத்தம்
Prathees
3 years ago

பண மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் பெண் ஒருவர் பல்வேறு அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி சிறைச்சாலை நிர்வாகத்திற்கு பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தத்தினால் சிறைச்சாலை அதிகாரிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்க அரசியல்வாதிகளுடன் தனக்குள்ள தொடர்புகளை காரணம் காட்டி, தமக்கான சிறப்பு சலுகைகளை வழங்குமாறு சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடம் கூட குறித்த பெண் அழுத்தம் கொடுப்பதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் சிறைப் புலனாய்வுப் பிரிவினர் அந்தப் பெண்ணிடம் இருந்த நவீன கையடக்கத் தொலைபேசியையும் கைப்பற்றினர்
தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி சிறை நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் காரணமாகவே அவரை வேறு சிறைக்கு மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.



