புனித வெள்ளி என்றால் என்ன?

Prathees
2 years ago
புனித வெள்ளி என்றால் என்ன?

உலகம் முழுவதும் இன்று  புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. புனித வெள்ளி என்பது அடிப்படையில் ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். 

இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், ‘இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.    

இயேசுவின் துன்பங்களை நினைவு கூரும் நாளாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் நாள் தான் புனித வெள்ளி.

இந்த புனித வெள்ளியானது இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாளை உலகம் முழுவதும் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. 

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொலை செய்வதற்காக அவரை அடித்து, துன்புறுத்தி அழைத்து செல்வதை நினைவு கூறும் வகையில் இந்த சிலுவை பாதை நடத்தப்படுகிறது. 

கத்தோலிக்க தேவாலயங்களில் இயேசு இல்லாததன் அடையாளமாக, சிலுவையில் அறையப்பட்ட உருவங்கள் ஊதா நிற துணியால் மூடப்பட்டுள்ளன.

இயேசுவின் மரணம் என்று அழைக்கப்படும் நினைவுகூரலின் நிதானமான  தன்மையைக் கொடுப்பதும், கிறிஸ்துவின் பேரார்வம்இ மரணம் மற்றும்  உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மர்மத்தை பிரதிபலிப்பதும் புனித வெள்ளியின் நோக்கமாகும். 

புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் முழு விரதம் கடைபிடிப்பார்கள். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!