இலங்கை ஜனாதிபதிக்கு மலர்வளையம் வைத்த மக்கள்- இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

Nila
3 years ago
இலங்கை ஜனாதிபதிக்கு மலர்வளையம் வைத்த  மக்கள்-  இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் மலர்வளையம் வைத்துள்ள சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளது. அத்துடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
அந்த வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் மரண அறிவிப்புடன் கூடிய மலர்வளையத்தை ஏந்தியவாறு பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இது குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!