பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் - நீதி அமைச்சர் டேவிட் வொல்ப்சன் தீடீர் பதவி விலகல்!

Nila
3 years ago
பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் - நீதி அமைச்சர் டேவிட் வொல்ப்சன் தீடீர் பதவி விலகல்!

பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் ஒன்று உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டு நீதி அமைச்சர் டேவிட் வொல்ப்சன் திடீரென தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டேவிட் வொல்ப்சன், 

“கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் மீறல் என்பது சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது. எனது அமைச்சு மற்றும் தொழில்சார் கடமைகளை கருத்தில் கொண்டு, நான் இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. 

டவுனிங் வீதியில் (பிரதமர் இல்லம்) என்ன நடந்தது, பிரதமரின் நடத்தை என்ன என்பது பற்றிய கேள்வி மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ பதில் அளிப்பு இதுவென” அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 2020ம் ஆண்டு கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் பொதுஇடங்களில் மக்கள் கூடவும், விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், 2020 ஜூன் மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிறந்த நாள் விருந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான டவுனிங் வீதியில் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததையடுத்து, அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.

எனினு, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த விதி மீறலுக்காக பிரதமர் போரிஸ் ஜேன்சனுக்கும், நிதி அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்டவர்களுகு்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆனால் இந்த விவகாரம் ஓயவில்லை. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களி ஒரு தரப்பினரும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனால் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே நீதி அமைச்சர் டேவிட் வொல்ப்சன் திடீரென தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நீதி அமைச்சரின் பதவி விலகல், பிரதமர் பதவி விலக மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!