சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஒருவர் அடித்து கொலை

சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே முகுனுவடவன - மஹகம பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு பேர் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர்.
அப்போது சிகரெட் இல்லை என கடையின் உரிமையாளர் கூறியதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குவாதம் முற்றி கடை உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த வர்த்தகர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



