இலங்கை முழுதும் கொதித்தெழுந்த மக்கள் - போக்குவரத்துக்கு தடை

Nila
2 years ago
இலங்கை முழுதும் கொதித்தெழுந்த மக்கள் - போக்குவரத்துக்கு தடை

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து இலங்கையின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் கோரி  முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக சிலாபம் - கொழும்பு வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது அத்துடன்,  எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் சேவை, ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது

மேலும், கண்டியில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்துக்கு  எதிராக ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் - கொழும்பு பிரதான வீதி காக்கப்பள்ளி பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.ரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக சிலாபம் - கொழும்பு பஸ் சேவையும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காக்காபள்ளிய, கட்டுநாயக்க, ரம்புக்கனை, காலி, கேகாலை, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, கம்பளை, கண்டி, மத்துகம, அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தண்டவாளங்களும் மறிக்கப்பட்டுள்ளமையால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.தியத உயனவுக்கு முன்பாக உள்ள பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், பொரளை – கொட்டாவ வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.