இரவு சாப்பாட்டிற்கு மரக்கறி பாஸ்தா செய்வது எப்படி? | Vegetable Pasta Recipe !
#Cooking
#dinner
#meal
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை
- பாஸ்தா - அரை கிலோ
- குடை மிளகாய் - மூன்றிலும் பாதியளவு (சிவப்பு, மஞ்சள், பச்சை)
- காரட் - ஒன்று
- பச்சை பட்டாணி (புரோசன்) - அரை டம்ளர்
- சோளம் (புரோசன்) - அரை டம்ளர்
- ஸ்பிரவுட்ஸ் - 10
- செத்தல் மிளகாய் - 4
- பெரிய வெங்காயம் - ஒன்று
- உள்ளி, இஞ்சி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
- சோயா சாஸ் - 2 மேசைக் கரண்டி
- ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு மேசைக் கரண்டி
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - வதக்க
செய்முறை :
- முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்ரா மூழ்கக் கூடிய அளவிற்கு தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க விடுங்கள்,
- கொதித்ததும் உப்பு சேர்த்து பாஸ்ராவை போட்டு ஒரு மேசைக் கரண்டி எண்ணெய் அல்லது மாஜரீன் போடவும்.
- பாஸ்ரா அவிந்ததும் (8-10 நிமிடங்கள்) வடித்து, பின் குளிர்நீர் விட்டு வடித்து, ஒரு தட்டில் பரவி வையுங்கள்.
- மரக்கறி களை ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டி கொஞ்சம் உப்பிட்டு வையுங்கள்.
- பச்சை பட்டாணி, சோளம் இரண்டையும் குளிர் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகாயை மூன்று அல்லது நான்கு துண்டுக ளாக வெட்டி, விதைகளை வெளியே கொட்டி விடவும்.
- வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, இரண்டையும் சேர்த்து ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
- வதங்கியதும், உள்ளி, இஞ்சி பேஸ்ட் சேர்த்து கிளறி, மரக்கறி களை கொட்டி பிரட்டி, 2 நிமிடங்களுக்கு மூடி விடவும். பின்னர் சோளம், பட்டாணி சேர்க்கவும். மெதுவாக பிரட்டி விடவும்.
- காரட் அவிந்த பதம் வந்ததும், பாஸ்ராவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பிரட்டவும். இப்போ சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, உப்பைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். குக்கரால் இறக்கி ஸ்வீட் சில்லி சாஸ் சேர்த்து விடுங்கள்.