பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவுவதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

#SriLanka #IMF #Lanka4
Reha
2 years ago
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவுவதாக சர்வதேச நாணய நிதியம்  உறுதி!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் உதவ தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக ஏனைய அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து சர்வதேச நாணய நிதியம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை தரப்பினர் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலுக்கு தீர்வு காண்பதற்கான மூலோபாய உத்திகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பான முதற்கட்ட தொழிநுட்ப ரீதியான கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மசாஹிரோ நொசாகி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.